ஆஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத் தீ

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் காட்டுத் தீ பரவலாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாண்ட் மாகாணங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆஸ்திரேலியா தீயணைப்பு அதிகாரிகள் கூறியதாவது:

”காட்டுத் தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவீன்ஸ்லாண்ட் ஆகிய மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வெயிலின் அளவு வரும் நாட்களில் 40 டிகிரி அளவு நீடிக்கும். இதனால் காட்டுத் தீ தொடர்ச்சியாக பரவும். தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்களில் நீர் பாய்ச்சப்பட்டு காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவுவது இயல்பானது என்றாலும் இந்த ஆண்டு உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதத்தை காட்டுத் தீ ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் காட்டுத் தீயிற்கு நாசமாகி உள்ளன.

சுமார் 300க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயினால் முற்றிலுமாக சேதமடைந்து உள்ளன.

ஆஸ்திரேலியாவில் சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான காட்டுத் தீ - ஆக இது பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 mins ago

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்