அமெரிக்காவில் பள்ளியைத் தாக்கத் திட்டமிட்ட மாணவர்கள் 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் பள்ளியைத் தாக்கத் திட்டமிட்ட மூன்று மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில் , “அமெரிக்காவின் மேற்கு நியூயார்க்கில் உள்ள அல்பியான் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்களைத் தாக்கத் திட்டமிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து துப்பாக்கி உட்பட ஆபத்தான பொருட்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

அம்மாணவர்கள் குறித்த முழுமையான விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையாகி, மனரீதியாகப் பாதிக்கப்பட்டு வன்முறைச் சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருவதாக அவ்வப்போது வெளியாகும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவது அவசியம் என மனநல மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்