துருக்கி அதிகாரிகளால் பிடிபட்ட ஐஎஸ் தலைவரின் சகோதரி

By செய்திப்பிரிவு

அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் பிடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், “சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள அலெப்போ மாகாணத்தில் உள்ள அசாஸ் நகரில் ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதியின் சகோதரி ரஸ்மியா வசித்து வந்தார். இந்நிலையில் ரஸ்மியா திங்கட்கிழமை துருக்கி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஸ்மியா, சிரியாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்ததாகவும், ரஸ்மியாவுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த நாச வேலைகளுக்குக் காரணமாக இருந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். இராக்கைச் சேர்ந்த அபுபக்கர் அல் பக்தாதியின் வயது 48.

சிரியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் அல் பாக்தாதி பதுங்கியிருப்பதாக அமெரிக்கப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் மறைந்திருந்த கட்டிடத்துக்குள் அதிரடியாகப் புகுந்த அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்கப் படையினருடன் கொண்டு செல்லப்பட்ட நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி, ஒரு குகை போன்ற சுரங்கத்துக்குள் புகுந்தார். அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து பக்தாதி இறந்த செய்தியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்