ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார்?

By செய்திப்பிரிவு

வாஷிங்டன், ராய்ட்டர்ஸ்

சிரியாவில் அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் இஸ்லாமிக் ஸ்டேட் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்தான் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் ‘முக்கியமான தகவல்’ ஒன்றை வெளியிடப்போவதாக ஈரானும் இராக்கும் தெரிவித்துள்ளன.

பெயர் கூற விரும்பாத அமெரிக்க அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, சனிக்கிழமை இரவு பக்தாதியைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றதா என்பது தெரியவில்லை என்றார்.

வடமேற்கு சிரிய மாகாணத்தின் இட்லிப்பில் உள்ள போராளிக்குழு ஒன்றின் கமாண்டர் கூறும்போது துருக்கி எல்லையில் அமெரிக்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் அல் பக்தாதி கொல்லப்பட்டார் என்கிறார்.

இரண்டு இராக்கிய அதிகாரிகள், ஈரானைச் சேர்ந்த அதிகாரிகள் 2 பேர் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதத் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.

சிரியா அதிகாரிகள் களத்திலிருந்து இதனைத் தெரிவித்ததாக ஈரான் அதிகாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக முதல் செய்தி வெளியிட்ட நியூஸ்வீக் அமெரிக்க ராணுவ அதிகாரியை சுட்டிக் காட்டி இதனை வெளியிட்டது.

பெண்டகன் இது குறித்து உடனடியாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று மாலை இந்திய நேரம் 6.30 மணிக்கு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிடப் போவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஹோகன் கிட்லி தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். ஆதிக்கம் ஒழிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் உலகம் நெடுகிலும் இதன் தீவிரவாதிகள் ஸ்லீப்பர் செல்களில் உள்ளனர். சிரியாவின் பாலைவனத்திலிருந்தும் இராக் நகரங்களிலிருந்தும் இவர்கள் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்