அமெரிக்கப் படைகள் 4 நாட்களில் வெளியேறும்: இராக்

By செய்திப்பிரிவு

சிரியாவிலிருந்து வந்த அமெரிக்கப் படைகள் 4 வாரங்களில் வெளியேறும் என்று இராக் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இராக் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாக்தாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது, “வடக்கு சிரியாவிலிருந்து வந்த அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள் 4 வாரங்களில் வெளியேறும்.

மேலும் இராக்கிலுள்ள படைகளை கணிசமான அளவில் குறைக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இதனை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்ல் எஸ்பரும் உறுதிப்படுத்தி இருக்கிறார்” என்றார்.

வடக்கு சிரியாவில் துருக்கி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஐஏஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக, பாதுகாப்புக்காக 1000 அமெரிக்கப் படையினர் மேற்கு ஈராக் அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து தனது படைகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்