கனடா பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மீண்டும் ஆட்சிக்கு வருகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

By செய்திப்பிரிவு

கனடாவில் பொதுத் தேர்தல் முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கை குறித்து ஏஎன்ஐ, “கனடாவில் பொதுத் தேர்தல் திங்கட்கிழமை நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் வாக்கு எண்ணிக்கையில் கன்சர்வேடிவ், லிபரல் கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில் மொத்த உள்ள 338 இடங்களில் பெரும்பான்மையைப் பிடிக்க 170 இடங்கள் தேவை.

தற்போது உள்ள வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி லிபரல் கட்சி 145 இடங்களையும், கன்சர்வேடிவ் கட்சி 115 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற இடங்களில் சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகள் கைப்பற்றியுள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின்படி ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி பல இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேலும் பெரும்பான்மையைப் பிடிக்க இன்னும் குறைந்த இடங்களே தேவைப்படுகின்றன. இதனால் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் வாழ்த்து 

கனடா தேர்தல் வெற்றிக்கு ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “அற்புதமான மற்றும் இந்தப் போராட்ட வெற்றிக்கு வாழ்த்துகள் ஜஸ்டின். அமெரிக்கா - கனடா ஆகிய இரு நாடுகளின் நலனுக்கு உங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

பின்னணி

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று கனடா பிரதமராக பதவி ஜஸ்டின் ட்ரூடோ பதவியேற்றார். இந்நிலையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல விமர்சனங்கள் தேர்தல் பிரச்சாரத்துன்போது எழுப்பப்பட்டும் இரண்டாவது முறையாக கனடா பிரதமராகும் வாய்ப்பு ஜஸ்டினுக்குக் கிடைத்தது.

2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிரதமர் போட்டிக்கு லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் ட்ரூடோவும், கன்சர்வேடிவ் கட்சி சார்பில் ஆண்ட்ரூ ஸ்கீரும் போட்டியிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்