சிரியா மீதான ராணுவ நடவடிக்கை நில அபகரிப்பு அல்ல: துருக்கி அதிபர்

By செய்திப்பிரிவு

சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி தாக்குதல் நடத்தியது நில அபகரிப்பு இல்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

துருக்கி சிரியாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்துவதை உலக நாடுகள் பல ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று விமர்சித்தனர்.

இந்த நிலையில் இதற்கு தற்போது துருக்கி அதிபர் எர்டோகன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து நிகழ்வு ஒன்றில் துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “ துருக்கிக்கு எந்த நாட்டின் நிலத்தின் மீது பார்வை கிடையாது. இம்மாதிரியான குற்றச்சாட்டுகளை எங்களுக்கு நேரும் மிகப் பெரிய அவமானமாக பார்க்கிறோம். சிரியாவின் வடக்குப் பகுதியில் எங்கள் ராணுவ தாக்குதல் நடத்தியது நில அபகரிப்புக்காக அல்ல” என்றார்.

தீவிரவாதத்துக்கு எதிரான துருக்கியின் நடவடிக்கையை அதன் நட்பு நாடுகள் ஆதரவு அளிக்காதையும் அவர் விமர்சித்தார்.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு துருக்கி சம்மதம் தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்