தென் சீனக் கடல் விவகாரம்: சர்ச்சைக்குள்ளான திரைப்படம் 

By செய்திப்பிரிவு

அனிமேஷன் திரைப்படமான 'அபோமினபிள்' (Abominable) வெளியாவதில் மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தனது வீட்டின் கூரையின் மீது பார்க்கும் பனி மனிதனை அவனது குடும்பத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஒரு சிறுமி இறங்குகிறாள். இதற்கு எதிரான சதியில் இறங்குகிறது ஒரு கும்பல். இறுதியில் சிறுமி தனது நண்பர்களுடன் இணைந்து பனி மனிதனை குடும்பத்தினருடன் சேர்க்கிறாளா என்பதே 'அபோமினபிள்' படத்தின் கதை.

இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் வெளியானது. இந்நிலையில் இம்மாதம் ஆசிய நாடுகளில் 'அபோமினபிள்' வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்ப்புக்குக் காரணம் தென் சீனக் கடல் தொடர்பான சர்ச்சையான காட்சி இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

தென் சீனக் கடல் சீனாவுக்குச் சொந்தமானது என்பதைக் குறிக்கும் வகையில் சீனா வெளியிட்ட வரைபடம் இப்படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்றுள்ளது.

தென் சீனக் கடல் விவகாரம் காரணமாக சீனா, மலேசியா, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வரும் நிலையில். சீனா வெளியிட்ட வரைபடத்தை படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு மூன்று நாடுகளின் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இப்படம் மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தென் சீனக் கடல் எங்களுக்குச் சொந்தமானது என்று சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் சீனா கூறும் பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா ஆகிய நாடுகள் சீனாவுடன் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

4 mins ago

வாழ்வியல்

9 mins ago

ஜோதிடம்

35 mins ago

க்ரைம்

25 mins ago

இந்தியா

39 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்