40 வயதிற்கு முன்னர் எடை அதிகரித்தால் பலவகையான புற்றுநோய்களுக்கு வாய்ப்பு: ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

ஒஸ்லோ,

40 வயதிற்கு முன்னர் அதிக எடை அல்லது பருமனான நபர்களுக்கு பல்வேறு வகையான புற்றுநோய்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக நார்வே நாட்டின் பெர்கன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

நார்வே நாட்டின் பெர்கன் பல்கலைக்கழகம் சமீபத்தில் புற்றுநோய் தொடர்பான ஓர் ஆய்வை நடத்தியது. இதில் உடல்பருமன் உள்ளவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று ஆய்வுமுடிவுகளில் தெரியவந்துள்ளது.

ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜி இதழில் கூறியுள்ளதாவது:

40 வயதிற்கு முன்னர் அதிக எடை கொண்டவர்களுக்கு கருப்பைப் புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து 70 சதவீதம் அதிகரித்துள்ளது, சிறுநீரக செல் புற்றுநோய்க்கு 58 சதவீதம் அதிக ஆபத்து, மற்றும் 29 பெருங்குடல் புற்றுநோய்க்கான அதிக ஆபத்து உள்ளது.

உடல் பருமன் தொடர்பான அனைத்து புற்றுநோய்களுக்கும் இரு பாலினருக்கும் 15 சதவீத ஆபத்து அதிகரித்துள்ளது. இந்த ஆய்வுக்காக புற்றுநோயை இருப்பதைக் கண்டறியும் முன், பெரியவர்களின் உடல் எடை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கைகளில் எடுக்கப்பட்ட எடை அளவீடுகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். இந்த எடை அளவீடுகள் குறைந்தது மூன்று வருடங்கள் இடைவெளியில் பெறப்பட்டவை.

2006இல் தொடங்கப்பட்ட மீ-கேன் ஆய்வின் ஒரு பகுதியான 220,000 நபர்களிடமிருந்து தரவைப் பயன்படுத்தி புற்றுநோய் ஆபத்து தொடர்பான வளர்சிதை மாற்ற காரணிகள் ஆய்வுசெய்யப்பட்டன.

மீ-கேன் ஆய்வில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளில் நார்வே, சுவீடன் மற்றும் ஆஸ்திரியாவிலிருந்து சுமார் 580,000 பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற சுகாதார பரிசோதனைகளின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 27,881 நபர்களில், 9761 (35 சதவீதம்) பேர் உடல் பருமன் தொடர்பானவர்கள் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிக உடல் பருமன் கொண்டவர்கர்களை ஆய்வு செய்தபோது அவர்களில் உடல் எடை 30க்கும் அதிகமாக இருந்துள்ளதைக் காணமுடிந்தது. இதில் பங்கேற்றுக்கொண்டவர்களில் ஆண்களுக்கு 64 சதவிகித ஆபத்தும், பெண்களுக்கு 48 சதவிகிதமும் அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

உடல் பருமன் பல புற்றுநோய்களுக்கு ஆபத்து காரணியாக விளங்குகிறது என்பது அறியப்பட்ட ஒன்று என்றாலும், ஒருவருக்கு அவரது எடை அளவீடுகள் பாடி மாஸ் இன்டக்ஸ் அளவீட்டை (அதிகப்பட்சம் 30 கிலோ எடையை ) மீறும்போது உள்ள அதில் உள்ள ஆபத்தை இந்த ஆய்வு துல்லியமாக தெரிவிக்கிறது.

இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

27 mins ago

ஜோதிடம்

33 mins ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்