சர்க்கரை அடங்கிய பானங்களின் விளம்பரங்களுக்குத் தடை: சிங்கப்பூர் அதிரடி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சிங்கப்பூர்,

அதிகரித்துவரும் நீரிழிவு வீதத்தை எதிர்த்து போராடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சர்க்கரை அதிகமுள்ள பான விளம்பரங்களுக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அத்தகைய குளிர்பானங்களுக்கே தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

சர்க்கரை பானங்களுக்கான விளம்பரங்களை தடைசெய்த உலகின் முதல் நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது என்று சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் நீரிழிவு வீதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சமீபத்திய நடவடிக்கையில் ஒரு பகுதிதான் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"குறைவான ஆரோக்கியம்" என்று கருதப்படும் தயாரிப்புகளுக்கு தடை விதிக்க சிங்கப்பூர் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக குளிர்பானங்களின் ஊட்டச்சத்து மற்றும் சர்க்கரை உள்ளடக்கத்தை தரப்படுத்தும் பொருட்கள் ஆராயப்படுகின்றன. அவற்றின் மூலம் மிகவும் ஆரோக்கியமற்ற எனக் கருதப்படுபவை ஒளிபரப்பு, அச்சு மற்றும் ஆன்லைன் சேனல்கள் உட்பட அனைத்து ஊடக தளங்களிலும் விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது நுகர்வோர் விருப்பங்களை விளம்பரங்களின் செல்வாக்கே தீர்மானிக்கின்றன. தவறான உள்ளடக்கமாக இருக்கும்பட்சத்தில் நுகர்வோரிடம் உருவாகும் செல்வாக்கை குறைப்பதை நோக்கத்தோடு குளிர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இத்தகைய தடை உலக அளவில் இதுவே முதன்மையானது.

இந்த நடவடிக்கைகள் ஒரு ஆரம்பம் மட்டுமே, இதனை அடுத்து சிங்கப்பூர் அரசாங்கம் சர்க்கரை வரி அல்லது தடைக்கான சாத்தியத்தை தொடர்ந்து ஆராயும்.

இவ்வாறு சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

6 mins ago

இந்தியா

37 mins ago

சினிமா

44 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்