பாக். போலீஸ் என்கவுன்ட்டரில் லஷ்கர் இ ஜாங்வி தலைவர் உள்ளிட்ட 14 பேர் பலி

By ராய்ட்டர்ஸ்

பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ ஜாங்வி தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மாலிக் இஷாக் உள்பட 14 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை லஷ்கர் இ ஜாங்வி தீவிரவாத இயக்கத் தலைவர் மாலிக் இஷாக் மற்றும் கூட்டாளிகளை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், இயக்கத்தின் ரகசிய ஆயுத கிடங்கை அடையாளம் காட்ட மாலிக் இஷாக் உள்ளிட்டோரை நேற்று (செவ்வாய்க்கிழமை) போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு வந்த சில தீவிரவாதிகள் இயக்கத்தின் தலைவர் உள்ளிட்டோரை தப்பிக்க செய்ய போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.

போலீஸாரின் என்கவுன்ட்டரில் லஷ்கர் இ ஜாங்வி தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மாலிக் இஷாக், அவரது மகன்கள் உஸ்மான் மற்றும் ஹக் நவாஸ் உள்பட 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலிக் இஷாக் கொல்லப்பட்டதை பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் ஷுஜா கன்ஸாடா உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதல் நடந்த பகுதி அருகே பயங்கர ஆயுதங்கள் ஆபாயகரமான வெடிப்பொருட்கள் சிக்கி இருப்பதாக போலீஸார் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு போலிஸ் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜாங்வி சர்வதேச நாடுகளின் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பிடித்தவர் ஆவார். இவரது தலைமையில் ஜாங்வி இயக்கம் பல்வேறு முறை ஷியா பிரிவு மக்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தி உள்ளது. சமீப காலமாக இந்த இயக்கம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும் அமெரிக்கா எச்சரித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்