சீனாவில் இம்ரான் கான்: பிரதமர் லி கெகியாங்குடன் சந்திப்பு

By செய்திப்பிரிவு

சீனாவுக்கு அரசியல் ரீதியாக 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இம்ரான் கான் அந்நாட்டின் பிரதமர் லி கெகியாங்கைச் சந்தித்தார்.

செவ்வாய்க்கிழமை சீனா சென்றடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறப்பு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. ராணுவ மரியாதை அணிவகுப்பில் இம்ரான் கானுடன் சீனப் பிரதமர் லி கெகியாங்கும் உடன் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடந்த சந்திப்பில் பாதுகாப்பு, பொருளாதாரம், விவசாயம், தொழிற்சாலைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.

மேலும், இச்சந்திப்பில் காஷ்மீர் தொடர்பாகவும் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்ற நிலை குறித்தும், பயங்கரவாதம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்ரான் கானுடனான சந்திப்பு குறித்து சீனப் பிரதமர் லி கெகியாங் கூறும்போது, “சீனா - பாகிஸ்தான் இடையேயான நட்பு ஆழமான அடித்தளத்தைப் பெறுகிறது. இரு நாட்டு மக்களும் பாரம்பரியமான நட்பை அனுபவிக்கிறார்கள்” என்றார்.

இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் இவ்வாரம் தெற்காசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தில் இந்தியா, நேபால் உள்ளிட்ட நாடுகளுக்கு ஜி ஜின்பிங் செல்கிறார்.

இப்பயணத்தில் கட்டுமானம், வர்த்தகம், வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக ஜி ஜின்பிங் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்