இந்தியவில் வெள்ள சேதம்: ஐ. நா. வருத்தம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்துக்கு ஐ. நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்தரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து. ஐ. நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்தரெஸின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள், சேதம் இவற்றை அறிந்து ஐ. நா. பொதுச் செயலாளர் வருத்தம் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டெழ அவர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

மேலும் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும் தெரிவித்து கொண்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளைச் செய்ய ஐ. நா தயராக இருக்கிறது” என்றார்.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மகாராஷ்டிர, பிஹார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால், கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான அணைகளும் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

பல பகுதிகளில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. . மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பலத்த மழையால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை, வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நள்ளிரவில் மேகம் பிளந்து மழை கொட்டித் தீர்த்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் நள்ளிரவில் ஒரே நேரத்தில் 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதேபோல் பிஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் பலத்த மழை கொட்டி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்