ஆப்கானிஸ்தானில் அதிபர் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு: 3 பேர் பலி 

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் அதிபர் அலுவலகம் வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள், “ஆப்கானிஸ்தானில் கந்தாஹார் மாகாணத்தில் உள்ள அஷ்ரப் கானி அலுவலகம் வெளியே செவ்வாய்க்கிழமை இரவு நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறும் நிலையில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது அங்கு பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்துவரும் போரிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் போரை நிறுத்த அமெரிக்கா தலைமையில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. பேச்சுவார்த்தை அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார். ட்ரம்ப்பின் முடிவு தலிபான்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

மேலும்