ஹவுடி மோடி: எங்கள் வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு - இந்திய அமெரிக்க வாழ் சமூகத்தினர் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றது எங்களது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு என்று இந்திய - அமெரிக்க வாழ் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு 7 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியப் பிரதமர் மோடி சென்றுள்ளார். அதில் முதல்கட்டமாக,
டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் அதிபர் ட்ரம்ப்புடன் இணைந்து பங்கேற்றார்.

சுமார் 50,000க்கும் அதிகமான இந்திய அமெரிக்க வாழ் மக்கள் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மோடி - ட்ரம்ப் இருவரும் இணைந்து பயங்கரவாதம் உட்பட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்துப் பேசினர்.

இந்நிலையில் ஹவுடி மோடியில் பங்கேற்றது எங்களது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு என்று இந்திய அமெரிக்க வாழ் சமூகத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அச்சமூகத்தை சேர்ந்த அஷ்வின் ஜோஹர் கூறும்போது, “பிரதமர் மோடியின் பேச்சு அற்புதமாக இருந்தது. அப்பேச்சு இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்த இனி வார்த்தைகளைப் பயன்படுத்த தேவையில்லை என்ற சமிக்ஞையை அளித்தது” என்றார்.

மேலும், ஹவுடி மோடி நிகழ்வில் கலந்துகொண்ட பெண் ஒருவர் கூறும்போது, “ ஹவுடி மோடி நிகழ்ச்சி எங்களது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு . அவர் இன்று வரலாற்றை உருவாக்கியுள்ளார். நாங்கள் மோடி ஜியை நேசிக்கிறோம் “ என்றார்.

சுமார் ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்ததாகவும், என்ஜிஆர் அரங்கத்தில் மோடியும், ட்ரம்ப்பும் கைகோத்து வலம் வந்தது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்