சீனக் கொடியை காலால் மிதித்த போராட்டக்காரர்கள்: ஹாங்காங்கில் தொடரும் வன்முறை

By செய்திப்பிரிவு

ஹாங்காங்கில்16-வது வாரமாகத் தொடரும் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் சீனக் கொடியை காலால் மிதித்ததைத் தொடர்ந்து பயங்கர வன்முறை வெடித்துள்ளது.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில், ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவை கடந்த ஜூன் மாதம் ஹாங்காங் கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கைதும் செய்யப்பட்டனர்.

இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த மசோதாவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் அரசு அறிவித்தது.

எனினும் கடந்த 4 மாதங்களாக போராட்டக்காரர்களின் பிற தேவைகளையும் நிறைவேற்றக் கூறி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்

இதுகுறித்து ஹாக்காங் ஊடகங்கள், “ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு நடத்திய போராட்டம் தீ எரிப்பு, சீனக் கொடிகளை மிதித்ததைத் தொடர்ந்து வன்முறையாக மாறியது. இதன் காரணமாக போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதன்காரணமாக ஹாங்காங்கின் வடக்குப் பகுதியில் உள்ள ஷாதின் நகரில் வன்முறை வெடித்தது. மேலும் போராட்டக்காரர்களை நோக்கி ரப்பர் குண்டுகளால் சுட்டனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் ஒருவர் கூறும்போது, “ நாங்கள் ஒருவேளை சோர்வடைந்தாலும் எங்கள் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்” என்றார்.

பேரணியில் பங்கேற்ற போராட்டக்காரர் கூறும்போது, “இந்தப் போராட்டம் 100 நாட்கள், 200 நாட்கள், 1,000 நாட்கள் கடந்தாலும் எங்கள் வேண்டுகோள் நிறைவேறும்வரை தொடர்வோம்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்