அதிபர் தேர்தலுக்கு முன்னர் சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பத்தம்: ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

அமெரிக்கத் தேர்தலுக்கு முன்னதாக சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கொண்டுவரப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ''அதிபர் தேர்தலில் நான் எளிதாக வெல்லப்போவதாக சீனா நினைக்கிறது. ஆனால், தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் நடந்தால் அது தற்போது இருப்பதைவிட மோசமாக இருக்கும். தேர்தலுக்கு முன்னர் சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டுவர எனது நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வர்த்தக ஒப்பந்தம் சீனா நினைத்துப் பார்க்கமுடியாத அளவு சிறப்பாக இருக்கப் போகிறது” என்றார்.

முன்னதாக, சீனத்திலிருந்து இறக்குமதியாகும் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்புச் சாதனங்கள், சலவை இயந்திரங்கள் ஆகியவற்றின் மீது ஜூலை மாத இறுதியில் அமெரிக்கா காப்பு வரி விதித்தது. சீனத்தின் அனைத்துப் பொருட்கள் மீதும் அடுத்து வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு சீனத் தரப்பிலிருந்து கடும் எதிர்வினை வந்தது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா பீன்ஸ், மோட்டார் வாகனங்கள், உதிரி பாகங்கள் போன்றவற்றுக்கு சீனாவும் காப்பு வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகப் போர் பதற்றம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இரு நாடுகளும் வர்த்தகம் தொடர்பான மோதலை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயன்று வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்