ஆப்கானில் அமெரிக்க தூதரகத்தில் குண்டு வெடிப்பு

By செய்திப்பிரிவு


ஆப்கனில் தேர்தல் பிரச்சார பேரணி அருகே தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இரண்டாவது குண்டுவெப்பு நடந்துள்ளது.

இதுகுறித்து டோலா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) குண்டு வெடித்தது” என்று கூறப்பட்டுள்ளது.

இதனை ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் பர்வான் மாகாணத்தின் தலைநகரான சரிகரில் இன்று ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதிக்கு அருகே திடீரென குண்டுவெடித்ததில் ஏற்பட்டது.

இதில் 24 பேர் பலியாகினர். 31 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் பெண்களும், குழந்தைகளும் அதிகம். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது

இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஆப்கானிஸ்தால் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை ரத்தானதன் காரணமாக தலிபான்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

க்ரைம்

1 min ago

சினிமா

16 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்