ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம்

By செய்திப்பிரிவு

ஹாங்காங்

‘ஒரு நாடு, இரு நிர்வாகம்' என்ற அடிப்படையில் ஹாங்காங் ஆட்சி நிர்வாகம் நடைபெறுகிறது. இதன்படி சீனாவின் கட்டுப் பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் பகுதிக்கு தனியாக அரசமைப்புச் சட்டம் உள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு குற்றவாளிகளை நாடு கடத்தும் சட்ட மசோதாவை ஹாங்காங்கில் அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏப்ரல் முதல் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின் றனர். அதன் அடுத்தகட்டமாக ஹாங்காங் சாலை, வீதிகளில் நேற்று மாலை ஆயிரக் கணக்கானோர் குடைகளுடன் திரண்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீ ஸாருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.

போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். இதற்குப் பதிலடி யாக போலீஸ் வாகனங்களை குறிவைத்து போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதனிடையே போராட்டத்தை நசுக்க சீன அரசு பல்வேறு அடக்குமுறைகளைக் கையாண்டு வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். ஆனால் புதிய தலைவர்கள் உருவாகி போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதால் சீன அரசு தடுமாறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்