வர்த்தகத்தில் முன்னுரிமை: ஜப்பானை நீக்கிய தென்கொரியா

By செய்திப்பிரிவு

வர்த்தகத்தில் முன்னுரிமை பெறும் நாடுகளின் பட்டியலிலிருந்து ஜப்பானை தென்கொரியா நீக்கியுள்ளது.

இதுகுறித்து தென்கொரியாவின் வர்த்தக அமைச்சரான சங் யுன் மோ இன்று (திங்கட்கிழமை) கூறும்போது, ''எங்களது வர்த்தக முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 29 நாடுகளிலிருந்து ஜப்பானை நீக்குகிறோம். ஏற்றுமதிப் பொருட்களில் சர்வதேச வர்த்தக விதிமுறைகளை ஜப்பான் மீறியுள்ளது'' என்று தெரிவித்தார்.

தென்கொரியாவின் வர்த்தகத்தைக் கீழிறக்க சமீபத்தில் ஜப்பான் எடுத்த நடவடிக்கைக்குப் பதிலடியாக இந்த முடிவை தென்கொரியா எடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், வர்த்தக முன்னுரிமைப் பட்டியலிலிருந்து ஜப்பான் நீக்கப்பட்டதற்கான முழுமையான விவரத்தை தென்கொரியா தெரிவிக்கவில்லை.

ஜப்பானுக்கு எதிராக தென்கொரியா எடுத்துள்ள இந்த மாற்றங்கள் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . தென்கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான் தரப்பில் இதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

50 mins ago

சினிமா

40 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

2 hours ago

மேலும்