பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம் எந்த நாட்டுக்கும் விற்கப்படவில்லை: சீன நிறுவனம் தகவல்

By பிடிஐ

பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தை எந்த நாட்டு அரசுக்கும் விற்பனை செய்யவில்லை என்று அதைத் தயாரித்த சீன நிறுவனமான டிஜேஐ தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்த விமானங் களை இணையதளம் மூலமோ, விநியோகஸ்தர்கள் மூலமோ வாங்குவது மிகவும் எளிது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பறந்த ஆளில்லா விமானத்தை கடந்த 15-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இது இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் பாகிஸ்தான் பகுதிகளை படம் பிடிக்க இந்த விமா னத்தை பயன்படுத்தியிருப்பதாக வும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

ஆனால் இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய உளவு விமானம் தங்கள் நாட்டின் டிஜேஐ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதுதான் என்று சீன அரசின் இணைய செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இது பாகிஸ்தானுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

29 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்