பழைய பொருட்கள் கடைக்கு வந்தது ரூ.1.2 கோடி மதிப்புள்ள பழமையான கம்ப்யூட்டர்: 1976-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கியது

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் ரூ.1 கோடியே 26 லட்சம் மதிப்புள்ள பழமையான ஆப்பிள் ஒன் கம்ப்யூட்டர் ஒன்று பழைய மின்னணு பொருட்களை வாங்கும் கடைக்கு வந்தது.

இந்த கம்ப்யூட்டரை அதன் இப்போதைய மதிப்பு தெரியாமல் ஒரு பெண் பழைய மின்னணு பொருட்களை எடைபோட்டு வாங்கும் கடையில் போட்டு விட்டுச் சென்றுள்ளார். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் முதல்முறையாக உருவாக்கப்பட்டபோது, அவற்றை கைகளால் வடிவமைப்பதுதான் வழக்கம். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் தனது நண்பர்களுடன் இணைந்து 1976-ம் ஆண்டு ஆப்பிள் ஒன் கம்ப்யூட்டர்களை உருவாக்கினார். இந்த வகை கம்ப்யூட்டர்கள் மொத்தம் 200 மட்டுமே உருவாக்கப்பட்டன. எனவே அவை இப்போது அரிய வகை பொருட் களில் ஒன்றாக கருதப்படுகின்றன.

சமீபத்தில் கலிபோர்னியாவில் பெண் ஒருவர் இறந்துபோன தனது கணவரின் அறையை தூய்மை செய்தார். அப்போது அங்கு உபயோகம் இல்லாத பல மின்னணு பொருட்கள் இருப்பதை கண்டார். அவை அனைத்தையும் ஓர் அட்டை பெட்டியில் போட்டு, பழைய மின்னணு பொருட்களை வாங்கும் கடையில் கொடுத்துச் சென்றார். அவர், தனது முகவரி உள்ளிட்ட விவரங்களை அளிக்கவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு அப்பெண் கொடுத்த பொருட்களில் உபயோகமாக ஏதேனும் இருக்குமா என்று அந்த கடைக்காரர்கள் சோதித்தனர். அப்போது அதில் ஆப்பிள் ஒன் கம்ப்யூட்டர் ஒன்று இருந்தது. மிகவும் அரிய பொருளான அதன் விலை இப்போது ரூ.1 கோடியே 26 லட்சமாகும்.அமெரிக்க சட்டப்படி இதுபோன்ற பழைய பொருட்கள் கடையில் தொன்மை வாய்ந்த பொருட்கள் தவறுதலாக கிடைத்தால், அதன் உரிமையாளருக்கு பாதி தொகையை வழங்க வேண்டும். எனவே இப்போது அந்த பழைய மின்னணு பொருள் கடையின் உரிமையாளர், ஆப்பிள் ஒன் கம்ப்யூட்டரை அளித்த பெண்ணை தேடி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்