தென்கொரிய புதிய பிரதமர் வாங் கியோ-ஆன்: நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது

By பிடிஐ

தென்கொரியாவின் முன்னாள் அமைச்சர் வாங் கியோ-ஆன் (58) புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட தற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இவ ருக்கு மெர்ஸ் வைரஸை கட்டுப் படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நீதித் துறை அமைச்சராக இருந்த வாங்கை புதிய பிரதமராக அதிபர் பார்க் கியூன்ஃஹை நியமித் திருந்தார். இந்த நியமனத்தை அங்கீகரிப்பதற்கான வாக் கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடத் தப்பட்டது. இதில் அவருக்கு ஆதர வாக 156 வாக்குகளும் எதிராக 120 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து வாங்கின் நியமனம் உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக, வாக்கெடுப்பில் கலந்துகொள்ள எதிர்க்கட்சி உறுப் பினர்கள் மறுப்பு தெரிவித்தனர். எனினும், வேகமாகப் பரவி வரும் மெர்ஸ் வைரஸைக் கட்டுப்படுத்து வதற்கு வாங் உடனடியாக பொறுப்பேற்க வேண்டி உள்ளதாக ஆளும் கட்சி கேட்டுக்கொண்டது. இதையடுத்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடிவு செய்தனர்.

இதற்கு முன்பு பிரதமராக இருந்த லீ வான்-கூ, ஊழல் புகார் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகினார்.

கடந்த மே 20-ம் தேதி மெர்ஸ் வைரஸ் தாக்குதல் தென்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் இந்த வைரஸால் 165 பேர் பாதிக்கப்பட்டு 23 பேர் பலியாகி உள்ளனர். இது ஆளும் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

வாழ்வியல்

34 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்