65 வயது தாய்க்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

By செய்திப்பிரிவு

ஜெர்மனியில் 13 குழந்தை களுக்கு தாயான 65 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளன.

உக்ரைன் நாட்டில் செயற்கை முறை கருத்தரிப்புக்கான தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு, இவருக்கு இக்குழந்தை கள் பிறந்துள்ளதாக ஆர்.டி.எல். தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டது.

ஜெர்மனியின் பெர்லின் நகர மருத்துவமனை ஒன்றில் இப் பெண்ணுக்கு 1 பெண் குழந்தை யும் 3 ஆண் குழந்தைகளும் பிறந்தன. 26 வாரங்களில் (குறை பிரசவம்) இக்குழந்தைகள் பிறந்தாலும் அவை பிழைத் திருக்கும் வாய்ப்புகள் பிரகாச மாக இருப்பதாக அச் செய்தி தெரிவிக்கிறது.

பெர்லின் நகரைச் சேர்ந்த அன்னக்ரெட்ரானிக் என்ற இந்தப் பெண், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி ஆசிரியராக பணியாற் றுகிறார். விரைவில் பணியி லிருந்து ஓய்வுபெறவுள்ள இவர், ஏற்கெனவே 13 குழந்தைகளுக்கு தாய் மட்டுமல்ல, 7 குழந்தை களுக்கு பாட்டியும் ஆவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்