தமிழ் அமைப்புக்கு இலங்கையில் தடை

By பிடிஐ

இலங்கையில் பல ஆண்டுகளாக அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த போர் 2009ம் ஆண்டு மே 18ம் தேதி முடிவுக்கு வந்தது. அந்த நாளின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க தமிழ் அமைப்புக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை அரசியல்வாதியான‌ கஜேன் பொன்னம்பலம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'எமது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மே 18ம் தேதி நடத்துவதாக இருந்த 'தமிழர் இனப்படுகொலை நினைவு தின' நிகழ்வுக்கு முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது' என்று கூறியுள்ளார்.

அதே தேதியில் இன்னொரு அமைப்பும் போர் நினைவு தினம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறது. அப்போது இரு குழுக்களுக்கும் இடையே மோதல் நிகழலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், மேற்கண்ட நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

அதே நாளில் இலங்கை அரசு 'ஆயுதப் படை நாள்' கடைப்பிடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்