நண்பரைக் கொன்ற இந்திய மாணவருக்கு ஆயுள் தண்டனை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

By பிடிஐ

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய மாணவரான ராகுல் குப்தா தனது நண்பரை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் ஜியார்ஜ் வாஷிங்டன் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர் ராகுல் குப்தா (25). இந்திய மாணவரான இவர் தனது நண்பரான மார்க் வாகை கடந்த 2013-ம் ஆண்டு கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013-ல் அக்டோபர் மாதம் நண்பர்கள் அனைவரையும் ராகுல் தனது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தார். அப்போது அவர்களது வீட்டில் இருந்து அதிக சப்தம் கேட்பதாக சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தார் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், ராகுலின் வீட்டில் கத்தியால் குத்துப்பட்டு கிடந்த சடலத்தை கைப்பற்றியதோடு, ராகுலையும் கைது செய்தனர்.

ராகுலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மார்க் எட்வர்ட் வாக் என்ற நண்பர் தன்னுடன் பள்ளியில் படித்தவர் என்றும் தனது காதலியும் வாகும் சேர்ந்து தனக்கு துரோகம் செய்ததாகவும் கூறினார்.

தனது காதலியுடன் உள்ள உறவு குறித்து விருந்துக்கு வந்த வாகிடம் கேட்டபோது, வாய்த் தகராறு முற்றி தன்னை வாக் கத்தியால் குத்த வந்ததாகவும், அந்த கத்தியை பறித்து அவரை குத்திக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

விளையாட்டு

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்