ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிரியாவின் தொன்மையான நகரம்

By செய்திப்பிரிவு

சிரியாவில் உள்ள தொன்மை வாய்ந்த நகரமான பல்மைரா ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது.

உலகின் பாரம்பரிய சின்னங் களில் ஒன்றாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்மைரா வில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்கள் உள்ளிட்டவை இடித்து தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் பாலைவனப் பகுதியில் சோலையாக அமைந் துள்ள பல்மைராவில் கிறிஸ்து வுக்கு முந்தைய காலகட்டத் திலேயே பயணிகள் தங்கிச் செல்லும் இடமாக இருந்துள்ளது. பைபிளிலும் இந்த இடம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இராக்கின் மொசூல் நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்த போது அங்கிருந்த 7-ம் நூற்றாண் டைச் சேர்ந்த மெசபடோமிய கால பாரம்பரியச் சின்னங்களை அழித்து அதன் வீடியோ காட்சிகளை வெளியிட்டனர்.

இந்த நிலையில் சிரியாவின் தொன்மையான பல்மைரா நகரின் மூன்றில் ஒரு பதியை ஐஎஸ் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் பொது மக்கள் பலர் படுகொலை செய் யப்படுவதாகவும் ஐ.நா. கண் காணிப்பு ஆணையம் தெரிவித் துள்ளது.

பண்டைய கால கட்டிடங்கள், சிலைகள், பொதுமக்கள் கூடும் பிரம்மாண்ட அரங்குகளை உள்ளடக்கிய பல்மைரா நகரத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றிலுமாக சிதைத்துவிடுவார்கள் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

சினிமா

52 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்