ஊழலுக்கு எதிராக எச்சரிக்கை: சீனாவில் அதிகாரிகளுக்கு சிறைச் சுற்றுலா

By ஏஎஃப்பி

சீனாவில் அதிகாரிகள் மட்டத்தில் நிகழும் ஊழலைத் தடுக்க, அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, அவர்கள் அனைவரையும் ஒரு நாள் சிறைச் சுற்றுலாவுக்கு அந்நாட்டு அரசு அனுப்பி வைத்துள்ளது.

சீனாவின் ஹூபி மாகாணத்தில் உள்ள சிறைக்கு சுமார் 70க்கும் அதிகமான அதிகாரிகள் சமீபத்தில் `சிறைச் சுற்றுலா'வுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்தச் சிறையில் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் முன்னாள் அரசு அதிகாரிகள் 15 பேரை சுற்றுலா குழுவினர் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் தற்போது பணியில் உள்ள அதிகாரிகளுக்கு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளதாகக் கூறப்பட் டுள்ளது.

இதுபோன்ற சிறைச் சுற்றுலாக்கள் இனி நாடு முழுவதும் நடத்தப்படும் என்று அந்நாட்டின் ஒழுங்காய்வுக்கான மத்திய ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக சீனாவில் அரசு அதிகாரிகள் பலர் ஊழல் குற்றத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்கும் விதமாக அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் பத்திரிகை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்படாத நிலையில், அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லாம் உட்கட்சி பூசல்களை ஒடுக்கவே பயன்படுகின்றன என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சீன அரசின் இந்த முயற்சிக்கு அந்நாட்டு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தாலும் எதிர்க்கருத்துகளும் இருக்கவே செய்கின்றன. அதில் ஒரு பயன் பாட்டாளர், "அரசு தற்போ திருக்கும் அதிகாரிகளை சோதனைக்கு உட்படுத்தினால் அவர்களில் பலர் எப்போதுமே சிறைகளில் இருக்க வேண்டி யவர்கள்தான் என்பது தெரிய வரும்" என்று கிண்டலடித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 mins ago

ஆன்மிகம்

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்