பாகிஸ்தானில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

By பிடிஐ

பாகிஸ்தானில் 8 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களில் 3 பேர் விமான கடத்தலில் தொடர்புடையவர்கள் ஆவர்.

கடந்த 2014 டிசம்பர் 16-ல் பாகிஸ்தானின் பெஷாவர் நகர் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 மாணவர்கள் உட்பட 145 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்த நாட்டு அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் சிறைகளில் சுமார் 8000 மரண தண்டனை கைதிகள் உள்ளனர். கடந்த டிசம்பருக்கு பிறகு இதுவரை 125 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களில் 3 பேர் விமான கடத்தலில் தொடர்புடையவர்கள் ஆவர்.

கடந்த 1998 மே 25-ம் தேதி பாகிஸ்தானின் டர்பாட் விமான நிலையத்தில் இருந்து 30 பேருடன் புறப்பட்ட விமானத்தை தீவிரவாதி கள் கடத்தினர். அந்த விமானம் அந்த நாட்டின் ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. ராணுவ கமாண்டோக்கள் அதிரடியாக விமானத்தில் புகுந்து பயணிகளை மீட்டனர்.

இதில் தொடர்புடைய ஷாசவார், சபீர், ஷாபீர் ஆகியோருக்கு 1998 ஆகஸ்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை மேல்நீதிமன்றங்களிலும் உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் ஷாசவார், சபீர் ஆகியோர் ஹைதராபாத் சிறையி லும் ஷாபீர் கராச்சி சிறையிலும் தூக்கிலிடப்பட்டனர். மேலும் 5 பேருக்கு கராச்சி, அட்டோக், சாஹிவால், ஹரிபூர் ஆகிய சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

14 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

40 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்