உலக மசாலா: செயற்கைக்கால் வாத்து!

By செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவில் வசிக்கிறார் சூ பர்கர். இவர் விலங்குகள், பறவைகள் மீது மிகுந்த அன்பு செலுத்தக்கூடியவர். இவரிடம் இருந்த ஓஸ்ஸி என்ற வாத்துக்கு ஒரு கால் உடைந்துவிட்டது. வாத்து நடக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டது.

தன்னுடைய வாத்துக்குச் செயற்கைக் கால் பொருத்தக்கூடியவர்கள் யாராவது இருந்தால் தொடர்புகொள்ளுங்கள் என்று ரேடியோவில் விளம்பரம் கொடுத்தார் சூ. நிறையப் பேர் உதவ முன்வந்தனர்.

இறுதியில் பிரமாதமான செயற்கைக் கால் ஒன்று தயார் செய்து வாத்தின் காலில் பொருத்திவிட்டனர். இரண்டு கால்களால் சதோஷமாக நடக்கிறது ஓஸ்ஸி.

வாத்துக்குக் கால் கொடுத்தவர்கள் வாழ்க!

ஜப்பானில் வசிக்கிறார் ஷின்ஜிரோ குமாகை. பகல் நேரங்களில் சுற்றுச்சூழல் ஆர்வலராக செயலாற்றி வருகிறார். இரவு நேரங்களில் நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோவாக வலம் வருகிறார். வெட்டுக்கிளி போல உருவம் கொண்ட ஹெல்மெட்டும் சூப்பர் ஹீரோவுக்கான உடையையும் அணிந்துகொள்கிறார். மிகப் பெரிய பைக்கை எடுத்துக்கொண்டு இரவு நேரங்களில் நகரில் சுற்றி வருகிறார். குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களைக் கண்டறிந்து, காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்.

குமாகையின் செயல் மூலம் கணிசமான அளவில் விபத்துகள் குறைந்துள்ளதால், காவல்துறை அவருக்கு ஆதரவளித்து வருகிறது. நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோவாக இருப்பது செலவு பிடிக்கும் விஷயம்தான். ஆனால் விபத்துகளைத் தவிர்த்து, எராளமான உயிர்களைக் காக்கும் பணி என்பதால் இதை விரும்பிச் செய்வதாகச் சொல்கிறார். சின்ன வயதில் இருந்தே காமிக் புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து வளர்ந்ததால், சூப்பர் ஹீரோவாக இருந்து நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதை நிஜமாக்க முடிந்ததில் எனக்கு மன நிறைவு என்கிறார் குமாகை.

வெல்டன் சூப்பர் ஹீரோ!

அமெரிக்காவில் வசிக்கும் மைக்கேல் பார்கின்சன், மோச்சா என்ற டாபர்மேனை வளர்த்து வருகிறார். மோச்சாவின் உணவுப் பழக்கத்தால் மிகவும் வருத்தப்படுகிறார் மைக்கேல். உலோகப் பொருட்களைக் கண்டவுடன் மோச்சா விழுங்கிவிடுகிறது. ஒருமுறை ஜூஸ் டப்பாவின் மூடியை விழுங்கிவிட்டது. அறுவை சிகிச்சை மூலம் அந்த மூடி வெளியில் எடுக்கப்பட்டது. தற்போது 3 கைக் கடிகாரங்களை விழுங்கிவிட்டது.

மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து, 3 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை மூலம் கடிகாரங்களை வெளியே எடுத்திருக்கின்றனர். மோச்சாவுக்கு எட்டக்கூடிய இடங்களில் எந்தப் பொருட்களையும் வைக்காமல் தான் பார்த்துக்கொள்கிறோம். கவனக் குறைவாக இருக்கும் நேரங்களில் இதுபோன்ற காரியங்களைச் செய்துவிடுகிறது. இன்னொரு முறை இப்படி ஏதாவது சாப்பிட்டால் மோச்சாவைக் காப்பாற்ற இயலாது என்று கூறிவிட்டார் மருத்துவர். மைக்கேல்தான் கவலையில் இருக்கிறார். மோச்சா அடுத்த கடிகாரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

ஐயோ… பாவம் மைக்கேல்…

இங்கிலாந்தின் மிக வயதான மரம் மடிந்து போகும் நிலையில் இருக்கிறது. அஷ்பிரைட்டில் தேவாலயத்தில் இந்தப் பழைமையான மரம் இருக்கிறது. மரத்தின் வயது சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் என்கிறார்கள். வெண்கலம் காலத்தில் உருவாக்கப்பட்டது ஸ்டோன் ஹெஞ்ச். அப்பொழுதே இந்த மரமும் வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். 38 அடி நீளத்துக்கு கிளைகளைப் பரப்பி இருக்கும் இந்த மரம் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை இலைகளை உதிர்த்து, புதிய இலைகளை உருவாக்கிக்கொள்கிறது. பிரிட்டனில் இருக்கும் 20 வயதான மரங்களில் இதுதான் மிகவும் சீனியர். வயதான காரணத்தால் மடிய இருக்கும் மரத்தை நினைத்து கவலைகொள்கிறார்கள் பிரிட்டன்வாசிகள்.

உலக வரலாறு முழுவதும் தெரிந்திருக்கும் இந்த மரத்துக்கு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்