ஏமனில் சண்டையில் 519 பேர் பலி: போர் நிறுத்ததுக்கு ரஷ்யா அழைப்பு

By ஏபி, ராய்ட்டர்ஸ்

ஏமனில் அதிபர் ஹதிக்கு ஆதரவான படைகளுக்கு எதிரான சண்டை தீவிரமடைந்து வரும் சூழலில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசிக்க ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்துக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

ஏமனில் வளைகுடா கூட்டுறவு படைகள் நடத்தும் போர் 10-வது நாளாக நீடிக்கிறது. சவுதி அரேபிய வான்வழித் தாக்குதலுக்கு பின்னர், ஏமன் அதிபர் மன்சூர் ஹதியின் மாளிகை உள்ள ஏடனிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறியதிலிருந்து ஏடன் தெருக்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அரசுக்கு எதிரான படைகளை குறி வைத்து ஹவுத்திக்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.

ஏமனில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து 519 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 1,700 பேர் காயமடைந்ததாகவும் வியாழக்கிழமை நிலவரப்படி ஐ.நா. கண்காணிப்பு குழு தெரிவித்தது.

மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம்:

ஏமனின் பெரும்பகுதிகளில் போரால் குழப்பான சூழல் நிலவுகிறது. தாக்குதல் நடத்துபவர்களை கண்டறியாத நிலை உள்ளது. இதனிடையே மனிதாபிமான அடிப்படையிலான் தற்காலிக போர் நிறுத்தம் குறித்து ஆலோசிக்க ரஷியா அழைப்பு விடுத்ததன் பேரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று (சனிக்கிழமை) கூடும் என்று அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக அதிபர் ஹதி மாளிகையிலிருந்து ஹவுத்திக்கள் பின்வாங்கியதிலிருந்து அவர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளன. இந்த தாக்குதலில் ஹவுத்திக்கள் 10 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அவர்களது பின்னடைவுகள் குறித்த தெளிவான செய்திகள் அந்நாட்டிலிருந்து வெளிவரவில்லை.

அதிபர் ஹதி ஆதரவாளர்களுக்கு பொட்டலங்கள் விநியோகம்:

பெரும் பகுதிகளை இழந்து பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அதிபர் ஹதிக்கு எதிரான படைகளுக்கு சவுதி அரேபிய அரசு உதவி வருகிறது. விமானத்தின் மூலம் வானிலிருந்து ஆயுதங்கள், மருந்து பொருட்கள் அவர்களுக்காக விநியோகம் செய்யப்படுகின்றன.

குறிப்பாக ஹவுத்திக்களின் வசம் உள்ள ஏடனின் தவாஹி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயுதங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் ராக்கெட் குண்டுகள் பாரஷூட்கள் மூலம் இறக்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தரைப்படை உதவி தேவை:

வளைகுடா கூட்டுறவு படைகள் உதவி வரும் நிலையிலும், தற்போதைய சூழலுக்கு அவை போதுமானதாக இல்லை என்பதால், பொதுமக்களை பாதுகாக்க தரைப்படைகளை ஏமன் தரப்பு கோரியுள்ளது. பல குடும்பங்கள் பிணையாக ஹவுத்திக்களிடம் சிக்கி இருப்பதாகவும், பொதுமக்கள் குண்டுவீச்சுகளுக்கு இடையே போராடுவதாகவும் ஹதி ஆதரவு வீரர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், "வான்வழித் தாக்குதலின் மூலம் ஹவுத்திக்களின் ஆதிக்கம் குறைந்துள்ளது. அவர்களது செல்வாக்கு சரிந்து கொண்டே போவதற்கு அதிபர் ஹதி ஆதரவு படைகள் ஏடனைச் சுற்றிய தங்களது பகுதிகளை மீண்டும் பெற்று வருவதே சான்று" என்று சவுதி படையின் தளபதி அகமது பின் அஸிரி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்