மெக்சிகோ சுரங்கத்தில் ரூ.53 கோடி தங்கம் கொள்ளை

By பிடிஐ

மெக்சிகோவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் ரூ.53 கோடி மதிப்பிலான தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக கனடாவைச் சேர்ந்த மெக்இவன் மைனிங் இன்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மெக்சிகோ நாட்டின் சினலோ மாகாணத்தில் எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான எல் கல்லோ 1 தங்கச் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் உள்ள தூய்மைப்படுத்தும் மையத்துக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள், 900 கிலோ எடை உள்ள தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.53 கோடி ஆகும்.

எனினும் இந்த கொள்ளை சம்பவத்தால் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சுரங்கப் பணியும் பாதிக்கப்படவில்லை. இந்த சுரங்கத்துக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கொள்ளை போன தங்கத்தின் மதிப்பை ஈடு செய்ய இந்த காப்பீட்டுத் தொகை போதுமானதாக இருக்காது.

இதுகுறித்து புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுலா

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்