தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மலேசிய எதிர்க்கட்சித் தலைவருக்கு விடுப்பு

By பிடிஐ

தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, மலேசிய சிறையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமுக்கு நேற்று ஃபர்லோ (விடுப்பு) வழங்கப்பட்டது. இறுதிச்சடங்கு முடிந்ததும் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்.

அன்வரின் 96 வயது தந்தை நேற்று காலையில் காலமானார். இதையடுத்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுப்பு வழங்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அன்வர் கோரிக்கை வைத்தார். இதை ஏற்று விடுப்பு வழங்கப்பட்டதையடுத்து அன்வரை சிறை பாதுகாவலர்கள் பலத்த பாதுகாப்புடன் அவரது சொந்த ஊருக்கு (கஜாங்) அழைத்துச் சென்றனர்.

அங்கு தனது தந்தையின் உடலுக்கு பிரார்த்தனையும் மரியாதையையும் செலுத்தினார். பின்னர் இறுதிச் சடங்கு முடிந்ததும் அன்வரை சிறை பாதுகாவலர்கள் மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், தனது உதவியாளருடன் தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில், அன்வருக்கு கடந்த ஆண்டு 5 ஆண்டு கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவரது மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் நிராகரித்தது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 10-ம் தேதி அன்வர் சிறையில டைக்கப்பட்டார். அப்போது அவர் கூறும்போது, “இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என்று கூறியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்