மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி லக்வி விடுதலை: பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஜகியுர் ரஹ்மான் லக்வி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

2008 நவம்பர் 26 ம் தேதி மும்பையின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குத லில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்-இ-தொய் பாவின் மூத்த தலைவர் ஜகியுர் ரஹ்மான் லக்வியும் அவரது கூட்டாளிகள் 6 பேரும் பாகிஸ் தானில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். இந்நிலையில் லக்வியை விடுதலை செய்ய தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் கடந்த டிசம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பு காரணமாக பொது அமைதி பராமரிப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன் றத்தில் மேல்முறையீடு செய் தார்.

கடந்த ஜனவரியில் அவரை விடுதலை செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் மீண்டும் பொது அமைதி பராமரிப்பு சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய கடந்த மார்ச் 12-ம் தேதி உத்தரவிட்டது. சிறையில் இருந்து விடுதலையாவதற்கு முன்பே பொது அமைதி பராமரிப்புச் சட்டத்தில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் லக்வி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அன்வரூல் ஹக், பாகிஸ்தான் அரசு லக்விக்கு எதிராக போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

லக்விக்கு எதிரான ஆதாரங் களை பாகிஸ்தான் அரசிடம் இந்தியா ஏற்கெனவே அளித்துள் ளது. ஆனால் அந்த நாட்டு நீதி மன்றத்தில் பாகிஸ்தான் அரசு போதுமான ஆதாரங்களை சமர்ப் பிக்கவில்லை என்று குற்றம் சாட்டப் படுகிறது. மேலும் அடியாலா நீதி மன்றத்தில் அரசு ஏற்பாட்டின் பேரில் லக்வி சொகுசு வாழ்க்கை நடத்தி வருவதாக மேற்கத்திய ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்