எதிர்க்கட்சித் தலைவருக்கு மன்னிப்பு அளிக்க மலேசிய அரசர் மறுப்பு

By பிடிஐ

தன்பாலினச் சேர்க்கை குற்றச்சாட்டில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மலேசிய எதிர்க்கட்சித் தலைவருக்கு ராஜ மன்னிப்பு அளிக்கும் கோரிக்கையை அந்நாட்டு அரசர் நிராகரித்தார்.

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக் கில், அன்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசிய அரசருக்கு உள்ள அதிகாரத்தின்படி, அவர் மன்னிப்பு அளிக்கும் குழுவுடன் கலந்தாலோசித்து மன்னிப்பு அளிக்க முடியும்.

இதனிடையே அன்வரின் குடும்பத்தினர் மலேசிய அரசரிடம் அன்வருக்கு ராஜ மன்னிப்பு அளிக்கக் கோரி மனுச் செய்தனர்.

கடந்த மார்ச் 16-ம் தேதி மன்னிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசர், அம்மனுவை நிராகரித்தார். இதையடுத்து அன்வரின் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், எம்.பி. தகுதியையும் அன்வர் உடனடியாக இழக்கிறார்.

இத்தகவலை, மூத்த மத்திய வழக்கறிஞர் அமர்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். அன்வரின் மேல்முறையீட்டை நிராகரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்தது.

அண்மையில் நாடாளு மன்றத்தில் தனது தந்தையின் உரையை வாசித்த அன்வரின் மகள் நூருல் இஸா அரச நிந்தனைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

36 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்