ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் பலி

By பிடிஐ

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் நேற்று நிகழ்த்திய தாக்குதலில் 13 பேர் பலியாயினர். அந்நாட்டு நாடாளு மன்ற உறுப்பினர் உட்பட சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானை ஒட்டி அமைந் துள்ளது கோஸ்ட் மாகாணம். இந்த மாகாண ஆளுநர் ஊழலில் ஈடுபட்ட தாகவும் நில மோசடி செய்துள்ள தாகவும் ஒரு பிரிவினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதையடுத்து, ஆளுநரைக் கண்டித்து அவரது இல்லத்துக்கு வெளியே கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று போராட் டம் நடைபெற்ற பகுதிக்கு அருகில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய் துள்ளார். இதில் 13 பேர் பலியாயி னர். காயமடைந்த 39 பேர் கோஸ்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை அந்த மருத்துவமனையின் மருத்துவர் அமினுல்லா கான் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் கோஸ்ட் மாகாணத்தைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் ஹுமாயுன் ஹுமாயுனும் காயமடைந்தார்.

இந்தத் தாக்குதலுக்கு எந்த ஓர் அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும், அரசுக்கு எதிராக தலிபான்கள்தான் இதுபோன்ற தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் ஆப்கானிஸ் தானில் தீவிரவாதத்தால் உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

விளையாட்டு

16 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

58 mins ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்