மோடி கண்டிப்பாக எங்கள் நாட்டுக்கு வருவார்: பாகிஸ்தான் நம்பிக்கை

By பிடிஐ

சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்பாக எங்கள் நாட்டுக்கு வருவார் என்று பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் நேற்று முஸ்லீம் நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமரின் வெளிவிவகாரத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியது:

தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு (சார்க்) மாநாடு அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் கண்டிப்பாக இங்கு வருவார்.

இந்தியா பாகிஸ்தான் உறவில் இருதரப்புக்கும் நன்மை அளிக்கும் விஷயங்கள் அனைத்தையும் பேசுவோம்.

இருநாடுகள் இடையே நம்பிக்கை குறைவாக இருப்பதே பெரும் பிரச்சினையாக உள்ளது. நம்பிக்கை உறுதியாகும்போது பிற பிரச்சினைகளை எளிதில் தீர்த்துக் கொள்ள முடியும்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் விரைவில் பாகிஸ்தானுக்கு வர இருக்கிறார். ஆனால் அதற்கான தேதி முடிவு செய்யப்படவில்லை என்றார்.

கடந்த ஆண்டு சீன அதிபரின் பாகிஸ்தான் பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தொழில்நுட்பம்

21 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

51 mins ago

விளையாட்டு

59 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்