ஹைதராபாத் நிஜாம் மன்னரின் நிதி வழக்கு- இந்தியாவுக்கு ரூ.1.39 கோடி தர வேண்டும்: பாகிஸ்தானுக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு

By பிடிஐ

ஹைதராபாத் நிஜாம் மன்னர் பிரிட்டன் வங்கியில் முதலீடு செய் திருந்த தொகைக்கான உரிமை தொடர்பான வழக்கில் சட்ட ஆலோ சனை கட்டணமாக இந்தியாவுக்கு ரூ.1.39 கோடி தர வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 67 ஆண்டுகளாக ரூ.325 கோடி மதிப்புள்ள ‘ஹைதராபாத் நிதி’ வழக்கு பிரிட்டனில் விசாரிக்கப் பட்டு வருகிறது. நேற்று நீதிபதி தனது உத்தரவில், “நிஜாம் மன்ன ரின் முதலீட்டுக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாட முடியாது.

எனவே, இந்த வழக்குக்காக மற்ற பிரதிவாதிகள் செலவிட்ட சட்ட ஆலோசனை கட்டணத்தை லண்ட னில் உள்ள பாகிஸ்தான் தூதர் வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இந்திய அரசு, தேசிய வெஸ்ட் மின்ஸ்டர் வங்கி மற்றும் நிஜாம் மன்னரின் வாரிசுகளான முக்காராம் ஜா, முஃபாகான் ஜா உள்ளிட்ட பிரதி வாதிகளின் சட்ட ஆலோசனை கட்டணம் சுமார் ரூ.3.72 கோடி யாகும். இதில் இந்திய அரசு ரூ.1.39 கோடியை செலவிட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பிரி வினைக்குப் பிறகு கடந்த 1948-ம் ஆண்டு லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் வங்கியில் (இப்போது நேட்வெஸ்ட்) அப்போதைய பாகிஸ் தான் தூதர் ஹபிப் இப்ராஹிம் ரஹிம்டூலா பெயரில் ரூ.9.37 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதன் இப் போதைய மதிப்பு ரூ.325 கோடி.

ஹைதராபாத்தின் 7-வது நிஜாமின் சார்பில் அவரது முகவ ரால் இந்த தொகை வங்கியில் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்ததையடுத்து, தனது முதலீட்டை திருப்பித் தருமாறு லண்டன் வங்கியிடம் நிஜாம் கேட் டுள்ளார். ஆனால் ரஹிம்டூலாவின் ஒப்புதல் இல்லாமல் பணத்தைத் தர மறுத்துவிட்டது.

இந்த நிதியைப் பெறுவதற்காக பாகிஸ்தான் அரசும் இந்திய அரசும் லண்டன் நீதிமன்றத்தில் போராடி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்