சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 4

By ஜி.எஸ்.எஸ்

அரேபிய தீபகற்பத்தின் முதல் நாகரீகம் என்று தில்மன் நாகரீகத்தைக் கூறலாம். அது குவைத்தின் அருகிலிருந்து ஓமனிலுள்ள குன்றுகள் வரை நீண்டிருந்தது. இது கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகள் முந்தைய கால கட்டம்.

கிரேக்கத்தை தன் வசம் கொண்டு வந்த அலெக்ஸாண்டர், பின்னர் பல நாடுகளை தன் ஆளுகையில் கொண்டு வரும் பேராசையோடு இயங்கினான். பாரசீகம் அவன் வசம் வந்தது. சிந்து சமவெளியில் உள்ள பல பகுதிகளைத் தன் பிடிக்குள் கொண்டுவந்தான்.

அடுத்து பிரம்மாண்டமான மகத சாம்ராஜ் யத்தையும் (அப்போது அது கிட்டத் தட்ட பீகாரிலிருந்து பஞ்சாப் வரை பரவி இருந்தது) வளைத்துப் போட வேண்டும் என்று விரும்பினான். ஆனால் தங்கள் தாயகத்தை விட்டுக் கிளம்பி பல வருடங்கள் ஆகி இருந்ததால் அவனது படை வீரர்கள் இதை விரும்பவில்லை.

வேறு வழியில்லாமல் அலெக்ஸாண்டர் மாசிடோனியா வுக்கு தன் படையுடன் திரும்பத் தொடங்கினான். வழியில் பாபிலோனில் உள்ள மன்னன் இரண்டாம் நெபுகட் நெஸாரின் அரண்மனையில் தங்கினான்.

அன்று மாலை அரண்மனையில் சிறப்பான களிப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மது பொங்கி வழிந்தது. மறுநாள் காலையில் அவனுக்குக் கடும் காய்ச்சல். உடலில் வெப்பம் அதிகமாகிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில், இன்னும் சில நாட்களுக்குத் தன்னால் பயணம் செய்ய முடியாது என்பதை அவன் உணர்ந்தான்.

தன் படை வீரர்களை நோக்கி “நீங்கள் மாசிடோனியாவுக்குச் செல்லுங்கள். நான் பிறகு வருகிறேன்'' என்பதை சைகை செய்து உணர்த்தினான். படையில் சிலரைத் தவிர மீதி பேர் தாய் நாட்டை நோக்கிக் கிளம்பினர்.

ஒன்று அல்ல, முழுமையாக பதினோரு நாட்கள் படுத்த படுக்கையாக இருந்தான் அலெக்ஸாண்டர். கடுமையான மலேரியா நோய் அவனை ஆட்டிப் படைத்தது. உடல் உபாதை அதிகமானது. பலப்பல நாடுகளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்த அந்த பேராசைக்கார மாவீரனின் உயிர் அடங்கியது.

முப்பத்திரண்டே வயதுக்குள் உலக சரித்திரத்தில் தன் முத்திரையை அழுத்தமாக பதித்துச் சென்ற அலெக்ஸாண்டரின் நிறைவேறாத இரண்டு கனவுகளில் ஒன்று மகதத்தை வெற்றி கொள்வது. மற்றொன்று அரேபியாவைத் தன் வசம் கொண்டு வருவது.

செல்வச் செழிப்பு மிக்க அரேபியா மீது எப்போதுமே ஒரு கண் வைத்திருந்தான் அலெக்ஸாண்டர். என்றாலும் அவனது தளபதிகளில் ஒருவனான நியர்சுஸ் அரேபியாவின் ஒரு பகுதியான பைலகா தீவில் வணிக கேந்திரம் ஒன்றைப் பின்னர் நிறுவினான்.

அரேபியாவின் செல்வச் செழிப்பு அதற்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத நபடியன் சாம் ராஜ்யத்திற்கு மிகவும் உதவிகர மாக இருந்தது ஒரு வேடிக்கை. ஏசு பிறந்த கால கட்டத்தில் வளர்ந்த இந்த சாம்ராஜ்யம் அரேபி யாவுக்கும் டமாஸ்கஸுக்கும் (இன்றைய சிரியா நாட்டின் தலைநகர்) நடுவே இருந்தது.

இந்த இரண்டு நாடுகளுக்குமிடையே நிறைய வணிகம் நடைபெற்றது அந்த சாம்ராஜ்ய மன்னர்களுக்கு மிகவும் வசதியாகிப் போனது. வணிகப் போக்குவரத்து நடுவில் இருந்த தங்கள் பகுதி வழியாக நடைபெற்றபோது ஒவ்வொரு வண்டிக்கும் இவ்வளவு என்று வரி வசூலித்து தன் கஜானாவை நிறப்பிக் கொண்டது அந்த அரசு.

இருபதாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே அரேபிய தீபகற்பத் தில் மனிதர்கள் வசித்து வந்தனர் என்கிறது அந்த நாட்டு தூதரகம். காட்டு மிருகங்களையும் தாவரங் களையும் உண்டு வேட்டையாடு வதைத் தொழிலாகக் கொண் டிருந்தனர் அந்த மக்கள்.

15,000 வருடங்களுக்கு முன் ஐரோப்பிய பனிக்கட்டிகள் உருகியதைத் தொடர்ந்து அரேபிய தீபகற்பம் உலரத் தொடங்கியது. பசும் புல்வெளிகளால் சூழப்பட் டிருந்த பகுதிகள் பாலைவனங் களாயின. காட்டு மிருகங்கள் ஒட்டு மொத்தமாக மறைந்தன. நதிகள் காய்ந்தன. மணல் படு கைகளைத்தான் காண முடிந்தது.

இதன் காரணமாக மனிதர்கள் இடம் பெயர வேண்டிய அவசியத் துக்கு உள்ளானார்கள். மலைப் பள்ளத்தாக்கு பகுதிகளை நாடி னார்கள். விவசாயம் வளர்ந்தது.

இதனால் பல பலன்கள் விளைந் தன. வேட்டையாடும் பழக்கம் மறைந்தது. ஆடுகள், மாடுகள், குதிரைகள், ஒட்டகங்கள் ஆகி யவை வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகளாயின. விவசாயம் தீவிரமடைய அடைய, மக்கள் கூட்டாக வாழத் தொடங்கினார்கள். மொழி, அரசியல் அமைப்புகள், கலை, கட்டடக்கலை போன்றவற் றுக்கு அஸ்திவாரம் இடப்பட்டது.

நைல் நதி பள்ளத்தாக்கு, மெசபடோமியா ஆகிய இரு பெரும் நாகரிகத் தொட்டில் களுக்கு நடுவே அமைந்திருந்தது அரேபிய தீபகற்பம். வணிகம் அதன் காலத்தின் கட்டாயமானது.

பாதாம் பருப்புகள், பேரீச்சம் பழங்கள், வாசனை திரவியங் கள் போன்றவற்றை மெசப டோமியா, நைல் பள்ளத்தாக்குப் பகுதி, மத்திய தரைப் பகுதி போன் றவற்றுக்கு அரேபியர்கள் வணிகம் செய்யத் தொடங்கினார்கள் அரேபிய தீபற்பத்தில் வசித்தவர் கள்.

அதேசமயம் தாங்கள் வணிகம் செய்த நாடுகளில் எழுந்த அரசியல் அமைதியின்மை அரேபியாவை எட்டியும் பார்க்கவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணமாக பெரும்பாலைவனங்கள் ஒரு தடுப்பு போல அரேபியாவைப் பிரித்திருந்ததுதான்.

கி.பி.570-ல் ஒரு முக்கிய நிகழ்வு. அரேபியாவில் இருந்த மெக்காவில் நபிகள் நாயகம் பிறந்தார்.

(உலகம் உருளும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

விளையாட்டு

8 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

41 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்