பாகிஸ்தான் ஏவுகணை சோதனை

By பிடிஐ

புதிய சீர்வேக ஏவுகணை (குரூஸ் மிஸைல்) ஒன்றை பாகிஸ்தான் நேற்று பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் வழக்கமான ஆயுதங்களை ஏந்தி சுமார் 350 கிமீ தொலைவுக்கு இந்த ஏவுகணை பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகச் சில நாடுகளால் மட்டுமே பயன்படுத்தப்படும் 'சீர்வேக தொழில்நுட்ப'த்தைப் பயன்படுத்தி அதன் மூலம் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

'ராட்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஏவுகணை நிலத்திலும் கடலிலும் இலக்குகளைத் தாக்கும் வல்லமை வாய்ந்தது. மிக தாழ்வாக பறக்கும் திறன்படைத்த ராட் ஏவுகணை மலைப்பகுதி தாக்குதலுக்கு ஏற்றதாகும்

இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றி யடைந்ததைத் தொடர்ந்து இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசைன் மற்றும் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆகியோர் தங்களின் பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்