பிரான்ஸில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: பெண் போலீஸ் பலி

By ஏஎஃப்பி

பிரான்ஸில் தலைநகர் பாரீஸ் அருகே அதிர்ச்சியூட்டும் வகையில் மீண்டுமொரு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மர்ம நபரின் தாக்குதலில் தாக்குதலில் பெண் போலீஸ் உயிரிழந்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் தெற்குப் பகுதியான செத்தலியான் என்ற இடத்தில் குண்டு துளைக்காத கவசம் அணிந்த மர்ம நபர், போலீஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய பெண் போலீஸ் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கருதப்படும் 2 மர்ம நபர்கள் கைது செய்யப்பட்டதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாரீஸ் மற்றும் முக்கிய நகரங்கள் அனைத்திலும் கடுமையான சோதனை நடத்தப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சார்லி ஹெப்டோ வார இதழ் அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், தற்போது நடந்திருக்கும் சம்பவத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்ற வகையில் விசாரணை நடந்து வருவதாக பாரீஸ் நகர பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பிர்னார்ட் காஸுனுவே விரைந்துள்ளார். பிரான்ஸில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடந்திருக்கும் இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதல் அந்நாட்டு மக்களை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக, பாரீஸில் புதன்கிழமை சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்திரிகை ஆசிரியர், 4 கார்ட்டூனிஸ்டுகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரை தேடும் பணியில் பிரான்ஸ் போலீஸார் ஈடுப்பட்டுள்ள சூழலில் மீண்டும் இத்தகைய தாக்குதல் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

16 mins ago

சுற்றுலா

28 mins ago

தமிழகம்

59 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்