ராஜபக்ச மனைவி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு மகன் மறுப்பு

By ஐஏஎன்எஸ்

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி மீதான தங்க ஊழல் குற்றச் சாட்டுக்கு அவரது மகன் நமல் ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவின் மூத்த மகனும் எம்.பி.யுமான நமல், இது தொடர்பாக நேற்று கூறும்போது, “எனது தாயார் எவ்வித குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. அரசியல் காரணங்களுக்காக இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அரசியல் பழிதீர்க்கவேண்டும் என்பதே புதிய அரசின் நோக்கம் என்றால் என் மீதும் என் தந்தை மீதும் குற்றம் சுமத்துங்கள். எனது தாயையும் தம்பிகளையும் விட்டுவிடுங்கள்” என்றார்.

இலங்கையின் லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் ஷிரந்திக்கு எதிராக கடந்த நேற்று முன்தினம் ஊழல் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை முன்னாள் ஐ.ஜி.யின் மனைவி ஷ்யாம்லி பெரேரா இப்புகாரை அளித்தார்.

அவர் தனது புகாரில், “எனது கணவர் பணியில் இருந்தபோது, அரசு கருவூலத்தில் இருந்து 100 கிலோ தங்கம் முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஷிரந்திக்கு தொடர்பு இருப்பதாகவும் ராணுவ உளவுத் துறை கூறியது. இது தொடர்பாக எனது கணவர் விசாரிக்கத் தொடங்கியதால், பொய்யான குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்” என்று கூறியிருந்தார்.

“இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது. எங்கள் குடும்பத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதே இதன் நோக்கம்” என்று நமல் ராஜபக்ச கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

விளையாட்டு

29 mins ago

இந்தியா

55 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்