அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, தாக்குதல் நடத்தியவரும் உயிரிழந்தார்

By பிடிஐ

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மருத்துவமனையில் புகுந்து துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது போலீஸார் அவரை சுட்டுக் கொன்றனரா என்பது தெரியவரவில்லை.

அமெரிக்காவில் பள்ளி, கல்லூரி, பூங்கா, திரையரங்கம் என பொது இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் டெக்சாஸின் எப்பாசோ நகரில் உள்ள மருத்துவமனைக்குள் புகுந்த நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதில் குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்து விட்டார்.

இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் உள்ளே புகுந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் உடலும் மீட்கப்பட்டது. அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தாரா அல்லது போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் கொல்லப்பட்டாரா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் மருத்துவமனை ஊழியர்களையும், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பதற்கான காரணமும் தெரியவரவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்