அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராகிறார் ஆஷ்டன்

By பிடிஐ

அமெரிக்காவின் அடுத்த பாதுகாப்புத் துறை அமைச்சராக ஆஷ்டன் கார்டர் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அந்நாட்டு அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் நடைபெறும் நிகழ்ச்சியின்போது, புதிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நியமனம் குறித்த அறிவிப்பை அதிபர் பராக் ஒபாமா வெளியிடுவார்” என கூறப்பட்டுள்ளது.

இந்தப் பதவியிலிருந்த சக் ஹேகல் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும், புதிய அமைச்சரை நியமிக்கும் வரை இந்தப் பதவியில் தொடருமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

ஒபாமாவுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் கார்டர், கடந்த அக்டோபர் 2011 முதல் டிசம்பர் 2013 வரை பாதுகாப்புத் துறை துணை அமைச்சராக பதவி வகித்துள்ளார். ஏப்ரல் 2009 முதல் அக்டோபர் 2011 வரை பாதுகாப்புத் துறையின் தொழில்நுட்பம் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பிரிவு செயலாளராக பதவி வகித்தார். இவர் இப்போது ஸ்டான்ஃபோர்டு பல் கலைக்கழகத்தின் ஹூவர் கல்வி மையத்தின் பகுதி நேர விரிவுரையாளராக உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

20 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

50 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்