26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் முறியடிப்பதில் உளவு நிறுவனங்கள் தோல்வி: அறிக்கை

By பிடிஐ

மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதல்களை போதிய தகவல்கள் இருந்தும் முறியடிக்காமல் போனது இந்திய, அமெரிக்க, பிரிட்டன் உளவு நிறுவனங்களின் தோல்வி என்று ஆய்வறிக்கை ஒன்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது,

நியூயார்க் டைம்ஸ், புரோபப்ளிகா, மற்றும் பிபிஎஸ் தொடர் ஃபிரண்ட் லைன் தலைப்பின் தமிழ் வடிவம் இதோ: "2008 மும்பை கொலைகள், குவியலாகக் கிடைத்த உளவுத் தரவுகள், ஆனால், நிறைவுறாத புதிர்” என்ற தலைப்பில் வெளியான இந்த அறிக்கையில், “மும்பைத் தாக்குதல்களின் மறைந்த வரலாறு பலவீனத்தையும், கணினி மாதிரி கண்காணிப்பின் பலத்தையும் வெளிப்படுத்துகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

“அடுத்து நடந்தது என்னவெனில் உளவுக்கலையின் வரலாற்றில் நூலிழையில் தப்பிய அதிபயங்கர விளைவு. 3 நாடுகளின் உளவு அமைப்புகள் இந்தியாவின் 9/11 என்று கருதப்படும் இந்த மும்பை தாக்குதல்களை முறியடிக்கும் சக்தி கொண்ட உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு முறைகளையும், பிற வழிமுறைகளையும் கொண்டதே. ஆனால் இந்த 3 நாடுகளின் உளவு அமைப்புகள் சேகரித்த தரவுகளை ஒருங்கிணைந்த முறையில் கையாளவில்லை” என்கிறது இந்த நீளமான அறிக்கை.

எட்வர்ட் ஸ்னோடன் அம்பலப்படுத்திய கிளாசிஃபைடு ஆவணங்களை மேற்கோள்காட்டி கூறும் போது, மின்னணு வதந்திகளில் எப்போதும் பயனுள்ள தகவல்கள் கிடைக்கும், தொழில்நுட்பத்தைக் கொண்டு நெருக்கமாக கண்காணிக்கவில்லையெனில் "உண்மையான” விவரங்களைக் கூட கவனியாது போகும் நிலை ஏற்படும்.

இதிலிருந்து பெறப்படும் விவரங்கள், மற்ற விவரங்களுடன் இணைத்து நோக்கப்பட வேண்டியது. ஆனால் அவ்வாறு செய்யவில்லை. கடல் அளவு டிஜிட்டல் தரவுகளிலிருந்து உளவுத்துறையின் பகுப்பாய்வுகள் தங்களுக்கு தேவையான தரவுகளை புடைத்து, சலித்து எடுக்கவில்லை.

குறிப்பாக 26/11 மும்பை தாக்குதலை கூர்மையாகத் திட்டமிட்ட பாகிஸ்தானின் ஸரர் ஷா என்பவரை இந்திய, பிரிட்டிஷ் உளவு நிறுவனங்கள் ஆன் லைனில் கண்காணித்தே வந்தன. ஆனால் தகவல்களை சரியாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி பார்க்கப்படவில்லை. விளைவு 6 அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலி.

2008ஆம் ஆண்டு ஷா என்ற அந்த லஸ்க்ர் பயங்கரவாதி பாகிஸ்தான் வடக்குப் பகுதி மலைப்பகுதிகளிலும், அரபிக்கடல் பகுதிகளில் பாதுகாப்பான புகலிடங்களிலும் இருந்து வந்துள்ளார். இங்கிருந்த படியேதான் மும்பை தாக்குதலை அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆனாலும், செப்டம்பர் மாதம் பிரிட்டன் உளவு நிறுவனம் ஷா-வின் ஆன் லைன் நடவடிக்கைகளை நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது என்பதை ஷா அறிந்திருக்கவில்லை. இவர்கள் மட்டும் ஷாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவில்லை. இந்திய உளவு நிறுவனம் ஒன்றும் அவரது நடவடிக்கைகளை நெருக்கமாகவே கண்காணித்தது என்று கூறுகிறது இந்த அறிக்கை.

பிரிட்டிஷ், இந்திய உளவு நிறுவனங்களின் முயற்சிகளை அறியாத அமெரிக்க உளவு நிறுவனம் பல்வேறு தரப்பிலிருந்து பெற்ற தரவுகளைக் கொண்டு மும்பையில் தாக்குதலுக்கு திட்டமிடப்படுகிறது என்று அமெரிக்கா பலமாதங்களுக்கு முன்பாகவே பலமுறை எச்சரித்திருந்தது.

முன்னாள் இந்திய பாதுகாப்பு செயலர் ஷிவ்சங்கர் மேனனை இந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது, “ஒருவரும் ஒட்டுமொத்தமான சித்திரத்தை அளிக்கவில்லை” என்று அவர் கூறியதை இந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.

ஷா-வின் ஆன் லைன் தொடர்புச் செய்திகளை ஓரளவுக்குத் தடம் கண்ட பிரிட்டிஷ் உளவு நிறுவனம், அந்தத் தரவு அச்சுறுத்தலை உறுதி செய்யும் அளவுக்கு இல்லை என்று அந்த உளவு நிறுவனம் கூறியது.

அமெரிக்காவிலிருந்து தொடர் எச்சரிக்கைகள் வந்தும் இந்திய உளவு நிறுவனம் சதியின் வலையை சரியாக இனம்காணவில்லை என்கிறது அந்த அறிக்கை.

குறிப்பாக பயங்கரவாதி டேவிட் ஹெட்லி மும்பை தாக்குதல் தொடர்பாக சதியாளர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட மின்னஞ்சல் தகவல்களை அமெரிக்கா அளித்ததும் இந்தியா கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், 2009-ஆம் ஆண்டு சிகாகோவில் ஹெட்லி கைது செய்யப்பட்டதற்கு சற்று முன்னர்தான் இது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளது இந்த அறிக்கை.

டேவிட் ஹெட்லியின் மனைவி மும்பையில் பல புரியாத திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறியதையும், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு முகமைகள் சரிவர புரிந்து கொள்ளவில்லை.

இது குறித்து அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி இது பற்றி கூறும்போது, “நாங்கள் இந்த அச்சுறுத்தலை கணிக்கவில்லை. நாங்கள் அல் கய்தா, தாலிபான், பாகிஸ்தான் அணு ஆயுதம், ஈரான் என்று கவனம் செலுத்தி வந்தோம். அச்சுறுத்தலை கவனிக்கத் தவறினோம் என்பதல்ல, தரவுகளை ஒருங்கிணைத்துப் பார்க்கவில்லை.

2008ஆம் ஆண்டு இந்திய, மேற்கத்திய உளவு நிறுவனங்கள் மும்பை தாக்குதல் சதித்திட்டம் குறித்த தரவுகளை சேகரிக்கத் தொடங்கியது. லஸ்கர் தாக்குதல் பற்றி அவ்வப்போது தகவல்களை இந்திய உளவு நிறுவனம் பெறத் தொடங்கியது.

செப்டம்பர் இறுதி மற்றும் அக்டோபரில் கடல் வழியாக பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் நுழைய லஸ்கர் திட்டமிட்டு வருவதாக இரண்டு சிஐஏ எச்சரிக்கைகளும் வந்ததாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

செப்டம்பர் மத்தியில் தாஜ் ஹோட்டல் மற்றும் பிற தாக்குதல் இலக்கு இடங்கள் பற்றி எச்சரிக்கை வந்தது இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நவம்பர் 24ஆம் தேதி வாக்கில் ஷா கராச்சியின் புறநகர்ப்பகுதிக்குச் சென்றார். அங்கு அவர் மின்னணு கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தினார். இந்திய பயங்கரவாதி அபு ஜண்டால் உதவியுடன் அது இயங்கியது. இந்த அறையிலிருந்துதான் நிமிடத்திற்கு நிமிடம் தாக்குதல் தகவல்கள் வந்துள்ளன.

என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்