உலக மசாலா: டைனோசர் பறவை

By செய்திப்பிரிவு

கிரேட்டிட் பறவை மிகவும் அழகானது. சாதுவானது போலத் தோற்றம் தரும். ஆனால் மிகவும் அச்சம் தரக்கூடிய பறவைகளில் இதுவும் ஒன்றாக மாறியிருக்கிறது. பறவைகள் டைனோசார்களில் இருந்து உருவாகியிருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். கிரேட்டிட் பறவைகளின் நடவடிக்கைகள் அவற்றை உறுதி செய்கின்றன. மற்ற பறவைகள், வெளவால்களை வேட்டையாடி, அவற்றின் மூளையை மட்டும் உணவாக்கிக்கொள்கிறது இந்தப் பறவை. இறக்கைகளைப் பிய்த்து, மூளையை வேட்டையாடும் காட்சி திகிலூட்டுகிறது. ஆப்பிரிக்கா, ஆசியாவில் வசிக்கும் இவை புழு, பூச்சி, விதைகளைத்தான் சாப்பிடும் என்று இதுவரை நம்பியிருந்தனர். சமீபத்தில் கிடைத்த பல ஆதாரங்கள் மூலம் சின்னஞ்சிறு பறவைகளின் மூளையை வேட்டையாடி வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அழகான ஆபத்து…

மெக்ஸிகோவில் உள்ள ஹுஸ்கோ உணவு விடுதி மிகவும் வித்தியாசமானது. வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ள இந்த உணவு விடுதி முழுவதும் விலங்குகளின் எலும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. மெக்ஸிகோவின் புகழ்பெற்ற ஆர்கிடெக்ட் இக்னாசியோ கேடெனாவின் வடிவமைப்பில், எலும்புகள் அதிசயிக்கத்தக்க வகையில் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கின்றன. 1940-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், இன்று புதிகாகக் கட்டியதைப் போலப் பொலிவுடன் காணப்படுகிறது. ஹால், மாடி, கழிவறை என்று அத்தனை இடங்களில் உள்ள சுவர்களிலும் அலமாரிகளிலும் எலும்புகள் விதவிதமாக வைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 10 ஆயிரம் எலும்புகள் இந்த உணவகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் இக்னோசியா. ஹுஸ்கோ என்றால் எலும்பு என்று அர்த்தம்.

நீங்க வெஜிடபிள் சாலட் கொடுத்தால் கூடச் சாப்பிட வருவாங்களான்னு தெரியலையே...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்