ராஜபக்சவுக்கு எதிரணி தலைவர் திடீர் ஆதரவு

By ஏபி

இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடும் எதிரணியில் இருந்து உதயா கம்மன்பிலா விலகி, மீண்டும் ராஜபக்ச அணியில் சேர்ந்துள்ளார். இதனால் மூன்றாவது முறையும் அதிபர் ஆவதற்கு ராஜபக்சவுக்கு ஆதரவு கூடுகிறது.

புத்த தேசியவாத கட்சியான தேசிய பாரம்பரிய கட்சியைச் சேர்ந்த உதயா கம்மன்பிலா எதிரணியில் இருந்தார். ஆனால் தற்போது அவர் ராஜபக்சவை ஆதரிக்கும் விதத்தில் எதிரணியில் இருந்து விலகியுள்ளார்.

அதிபர் தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்ரிபால சிறிசேனா போட்டியிடுகிறார். அவர் ராஜபக்ச அரசில் இருந்து விலகும்போது அவருடன் 11 அமைச்சர்களும் வெளியேறினர்.

இதனால் ராஜபக்சவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் சமீபத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸா அட்டநாயகே மற்றும் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் ஜெயந்த கெடகோடா ஆகிய‌ இரண்டு முக்கியத் தலைவர்கள் எதிரணியில் இருந்து விலகி ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.

தற்போது உதயா கம்மன்பிலாவும் சேர்ந்திருப்பதால், ராஜபக்ச‌ மீண்டும் ஆதரவு அதிகாரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

30 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்