ஆஸ்திரேலியாவில் குடியேறும் வெளிநாட்டவர்களில் இந்தியா முதலிடம்

By பிடிஐ

ஆஸ்திரேலியாவில் குடியேறும் வெளிநாட்டவர்களில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இது தொடர்பாக மெல்போர்ன் ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2012-13-ம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேற 1 லட்சத்து 23 ஆயிரத்து 400 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 40,100 விண்ணப்பங்கள் இந்தியர்களிடம் இருந்து பெறப்பட்டது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 46.6 சதவீதம் அதிகமாகும்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவில் இருந்து 27,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பிரிட்டனில் இருந்து 21 ஆயிரத்து 700 பேர் ஆஸ்திரேலியாவில் குடியேற விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியா பாஸ்போர்ட் இருந்தால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது எளிதாக இருக்கும் என்பது முக்கிய காரணம்.

அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் வசிக்க தற்காலிக விசா வழங்கப்பட்டு, அவை காலாவதியான பிறகு 62, 700 பேர் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ளனர் என்றும் அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்