பாகிஸ்தானில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவு

By ஐஏஎன்எஸ், பிடிஐ

தீவிரவாத சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் நேற்று விலக்கிக்கொண்டது

பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தும் பள்ளிக்கூடம் ஒன்றில் தலிபான் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் புகுந்து 132 குழந்தை கள் உள்பட 148 பேரை கண் மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அமைச்சர்கள் குழு அளித்த ஆலோசனையின் பேரில் இத்தடை விலக்கிக் கொள்ளப் படுவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று அறிவித்தார்.

இதன் மூலம் மரண தண்ட னையை எதிர்நோக்கியுள்ள தீவிரவாதிகளின் தண்டனை இனி நிறைவேற்றப்படும் என்று ஜியோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் தீவிரவாதம் தொடர்பான குற்றங்களில் மரண தண்டனைக்கு 2008-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. நவாஸ் ஷெரீப் அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இத்தடையை நீக்க விரும்பியது. ஆனால் சர்வதேச அளவிலான நிர்பந்தம் காரணமாக இம்முடிவை நவாஸ் ஷெரீப் பின்னர் கைவிட்டார்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளு டனான சலுகை வர்த்தக ஒப்பந்தம் ரத்தாகும் என்ற அச்சத்தாலும் நவாஸ் ஷெரீப் இத்தடையை நீக்கவில்லை.

உள்துறை அமைச்சக புள்ளி விவரப்படி பாகிஸ்தானில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தடை காரணமாக தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளனர். தற்போது தடை நீக்கப்பட்டுள்ள தால் சில வாரங்களில் இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க் கிழமை பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக அரசுக்கும் ராணுவத்துக்கும் நெருக்குதல் அதிகரித்துள்ள நிலையில், இத்தடை நீக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் பெஷாவர் நகரில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பெஷாவர் தாக்குதல் மட்டுமன்றி நாடு எதிர்நோக்கியுள்ள பிற சவால்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.

இக்கூட்டத்தில் நவாஸ் ஷெரீப் பேசும்போது, “இந்தத் தாக்குதல் காட்டுமிராண்டிகள் கட்டவிழ்த்து விட்ட தேசிய துயரம். நமது குழந் தைகளின் தியாகம் வீணாவதை அனுமதிக்கமாட்டோம். தலிபான் களுடன் நடத்திய பேச்சுவார்த்தை யில் எவ்வித பலனும் ஏற்பட வில்லை. தீவிரவாதத்தை எதிர்த்து பாகிஸ்தான் நீண்டகாலமாக போரிட்டு வருகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது” என்றார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, “தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட எல்லா கட்சி களும் ஒன்றுபட்டு நிற்கின்றன. தீவிரவாதத்தை வேரோடு ஒழிப் பதற்கான வழிமுறைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

கல்வி

13 mins ago

விளையாட்டு

18 mins ago

தமிழகம்

26 mins ago

விளையாட்டு

39 mins ago

தமிழகம்

49 mins ago

சினிமா

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

இந்தியா

1 hour ago

வேலை வாய்ப்பு

2 hours ago

மேலும்