பாகிஸ்தானில் சுமார் 55 தீவிரவாதிகளுக்கு தூக்கு?

By பிடிஐ

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் 55 பேருக்கான கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் விரைவில் தூக்கிலிடப்படலாம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரி நிஸார் அலி கான் கூறும்போது, அதிபர் மன்மூன் ஹூசைன், 55 பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். பெஷாவரில் நடந்த பயங்கரவாத சம்பவத்தால் குழந்தைகள் உட்பட 148 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தானில் தூக்கு தண்டனைக்கான தடை நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த கருணை மனுக்கள் மீதான நிராகரிப்பு நடவடிக்கை அவசர நிலையில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிராகரிப்பினை அடுத்து தீவிரவாதிகள் எடுக்கக்கூடிய எத்தகைய முடிவையும் எதிர்கொள்ள பாகிஸ்தான் அரசு தயாராக உள்ளதாகவும் நிஸார் கூறினார்.

இவர்களைத் தொடர்ந்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதனை எதிர்த்து கருணை மனு தாக்கல் செய்து காத்திருக்கும் சுமார் 500 கைதிகளின் மனுக்களும் நிராகரிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்